சிறுபான்மை மாணவிகளுக்கு மத்திய அரசின் பேகம் ஹஜ்ரத் மஹல் கல்வி உதவித்திட்டம்

கல்வியில் சிறந்து விளங்கும், கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு பேகம் ஹஜ்ரத் மஹல் (மௌலானா ஆசாத்) தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் சார்பில் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்தோர் நிகழாண்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகளுக்கு மத்திய அரசின் பேகம் ஹஜ்ரத் மஹல் (மௌலானா ஆசாத்) கல்வி அமைப்பு மூலம் ரூ.12000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்தொகை இரண்டு தவணைகளில் (11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும், 12-ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரம்) வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை மாணவிகளின் கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் உண்டு உறையுள் கட்டணங்களுக்காக மட்டும் வழங்கப்படுகிறது. இத்திட்டம்  தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கு

குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியமாகும். 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும. அதேபோல், நிகழாண்டில் 2017-18 ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கிகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் முறையாக சேர்ந்து 11-ம் வகுப்பு படித்து வருபவராக இருக்க வேண்டும். அதற்கான சேர்க்கை அனுமதிச் சீட்டு கடித நகல் இணைத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் வருமான சான்றிதழ், ரூ.20 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் ஆகியவைகளை விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். மாணவிகளின் கல்வி உதவி தேவைக்கான விபரங்களை முதலில் கீழ்க்காணும் இணைய தளத்தில் பதிவு செய்தபின் இதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்களை www.maef.nic.in

இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாணவி கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  சரி பார்த்து உரிய சான்றுகளுடன் கையொப்பம் செய்து குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button