இஸ்லாத்தை தழுவிய தலித்துகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது : -திருமாவளவன்

உஸ்மான் கான்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் “மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் ஒரு ஆய்வு”எனும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்டு வரும் ஆய்வின் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவியதன் மூலம் தலித்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த தலித் சகோதரர்கள் குடும்பம் குடும்பமாக சாத்திய வன்கொடுமைகள் காரணமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் விவாதங்களை எழுப்பியதும்,இந்த சம்பவத்தை மையமாக கொண்டு ஹிந்து முன்னணி எனும் பயங்கரவாத அமைப்பு அன்றைய அதிமுக அரசின்உதவியுடன் துவங்கப்பட்டதும் வரலாறு.

தனது கள ஆய்வில் ஏறத்தாழ நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோரிடம் நேரடியாக சேகரித்த தகவல்களின் அடிப்படையில் திருமா குறிப்பிடுவதாவது,

“தலித்துகள் நாடு முழுவதும் பொருளாதார தன்னிறைவு அடைந்தும் சாதிய ரீதியிலான பாகுபாடுகளால் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்தே வருகிறது,முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்,முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகள் மீனாட்சிபுரத்தில் வெளிநாட்டு பணஉதவிகள் மூலம் இந்த மதமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என முன் வைத்த குற்றசாட்டுகளில் உண்மை இல்ல. 1981 ஆம் வருடம் சாதி இந்துக்கள் இருவர் அருகிலுள்ள மேக்கரை பகுதியில் படுகொலை செய்யப்பட்டதன் பெயரில் தலித்துகள் காவல் துறையினரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதும் இந்த மன மாற்ற த்திற்கு முக்கிய காரணம் ஆகும்” இந்த மன மாற்றத்திற்கு பின்னர் தங்களை ஒடுக்கிய சாதி இந்துக்களாலேயே “பாய்”என்றழைக்கப்படுவதை பற்றி பெருமையாக கூறும் அப்பகுதி முஸ்லிம்கள் , பண்பொழியில் பெரிய வணிக நிறுவனத்தை நடத்தும் உமர் மற்றும்,பள்ளிக்கூடத்திற்கே செல்லாத ஆனால் குரான் வசனங்களை மனப்பாடமாக கூறும் எழுபத்தி ஐந்து வயது பாத்திமா,ஆகியோரை பற்றி தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடும் திருமா அன்றாடம் தனது ஜீவனத்திற்கு சிரமப்படும் அமீர் அலியை சுட்டி காட்டி வெளி நாட்டு பண வரவு குறித்தான விமர்சனத்தை மறுக்கிறார். மேலும் பெண்கள் இப்போதும் எஸ்டேட்களில் வேலை செய்வதில் எந்த மாற்றமும் இல்லை. ,மாற்றம் என தான் காணுவது அவர்கள் தலையில் இட்டு செல்லும் முக்காடு ஒன்றே என்பதுடன் முஸ்லிம்களும் இந்துக்களும் பரஸ்பரம் தங்களது வழிபட்டு தலங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிக்கொள்ளும் சகோதரத்துவத்தையும் குறிப்பிடுகிறார்.

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கம் வழிகாட்டலின் கீழ் முனைவர் பட்டத்திற்காக இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button