இந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை

நீதியரசர். அரிபரந்தாமன்

இந்துத்துவா இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றது. அது, இந்திய நாட்டை,  இந்து தேசியமாக,  ராம ராஜ்யமாக வரையறுக்கிறது.

 அதை எதிர்ப்போரை தேச விரோதிகள் என்றும்,  நாட்டை விட்டு வெளியேறி, பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாகவே மிரட்டுகிறது.  பேராசிரியர் சிவப்பிரகாசம் இந்த ஆயுத தயாரிப்பில், சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார். இது தொடர்பாக, பல நாட்கள் என்னுடன் நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தி யுள்ளார். இந்து மதத்தின் அடிப்படை வருணாசிரம கொள்கையே சாதிய சமூகத்தின்அடிப்படை ஆகும்.  ஒரு சாதி மற்றொரு சாதியை விட உயர்ந்தது, தாழ்ந்தது என இந்து மதம் போதிக்கின்றது. இதுபோல, உலகில் வேறு எந்த மதமும், சமூகத்தை இறுக்கமான சாதிகளாகப்  பிரிக்கவில்லை.

 வருணாசிரமக் கொள்கை, கோட்பாடு

வருணாசிரம கொள்கைப்படி  அமைந்த சாதிய சமூகம் – பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்றும்,   சூத்திரரின் கடமை, மற்ற மூன்று மேல்சாதியினருக்கு சேவை செய்வது என்றும், சூத்திரருக்கு கல்வி மற்றும்  பொருள் சேர்ப்பதற்கு உரிமை கிடையாது என்றும், சாதிய சமூகத்தில், வருணாசிரம கொள்கைக்கு அப்பாற்பட்ட பஞ்சமர்  என்றழைக்கபடும் தாழ்த்தப்பட்டவர்கள், சூத் திரருக்கும் கீழ்நிலையில் வைக்கப்பட்டனர். மனுநீதி முதல் பகவத்கீதை வரை அனைத்து இந்து மத சாத்திரங் களும், தத்துவங்களும், வருணாசிரமத்தை போற்றிப் பாதுகாக்கின்றன.  இந்துவாக பிறக்கும் எவரும், ஒரு சாதி அடையாளத்துடன் தான் பிறக்கிறார். அவர் இறக்கும் வரை அந்த சாதி அடையாளம் தொடரும். சாதியை எவரும் மாற்றிக் கொள்ள முடியாது. மத நம்பிக்கையை மாற்றிக்கொண்டாலும் – இந்துமதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறினாலும் – சாதி அடையாளம் தொடரும் அளவிற்கு இந்து மதத்தின் தாக்கம் உள்ளது.   மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பினாலும்,  அதே சாதி அடையாளம் தொடர்கிறது.

 நான் இந்துவாக  சாக மாட்டேன்

டாக்டர் அம்பேத்கர், தான் இந்துவாக பிறந்திருந்தாலும், இந்துவாக சாகமாட்டேன் என்றார். அவர்  இறப்பதற்கு முன், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்டோருடன் புத்த மதத்திற்கு மாறினார். சாதியை ஒழிக்கவேண்டும் என்றால், இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்று அவரது புகழ்பெற்ற “சாதியை அழித்தொழித்தல்” (கிஸீவீலீவீறீணீtவீஷீஸீ ஷீயீ நீணீst )  என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.  நிலவுடமைச் சமூகத்தில், இந்து மதம் அரசு மதமாக இருந்தது.  நிலவுடமை அரசு, நால்வருணத்தின் பாதுகாவல னாய் இருந்தது.

ஐரோப்பியர்களின் வருகை, குறிப்பாக பிரிட்டிஷ் அரசின்கீழ் இந்தியா  அடிமைப்பட்டபோது, முதலாளித்துவத்தை அழைத்து வந்தது. ரெயில்வே துறையும், சாலைபோக்குவரத்தும், தொழிற்சாலைகளும், திரை அரங்களும் முதலாளித்துவத்தின் அடையாளங்களே.  முதலா ளித்துவம் தான், நிலவுடமை சமூகத்தில் ஆழவேர் விட்டு இருந்த சாதிய இறுக்கத்தைஅசைத்துப் பார்த்தது. இட ஒதுக்கீடு கேட்டு ஓங்கி ஒலிக்கிறது.அந்த நேரத்தில் அம்பேத்கரின் குரலும், தந்தை பெரியாரின் குரலும்.  ஓங்கி  ஒலித்தன. சுதந்திரத்திற்குப் பின், 26.01.1950 முதல் அமலுக்கு வந்த அரசமைப்புச் சட்டம், இந்திய அரசு  மத சார்பற்றது என்பதை தெளிவாக்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இறுகிப் போன சாதியத்தை அவ்வளவு சுலபமாக வீழ்த்தி விட முடியாது. இந்து மதத்தின் சனாதனத்தை எதிர்த்ததில் முன்னிலை வகித்தது தமிழகம். மொத்ததில், சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வும், கல்வி மறுப்பும் தொடரும் வரை, இட ஒதுக்கீடு அவசியம் என ஓங்கி உரைக்கின்றது  இந்த நூல்.

நூல்: இந்துத்துவாவும், மண்டலும் ஒரு வரலாற்றுப்பார்வை

ஆசிரியர்: பேரா. வெ.சிவப்பிரகாசம், வெளியீடு: கலாம் பதிப்பகம்

044 24997373, விலை: ரூ.200, பக்கம் : 198.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button