அரசு பொது இ-சேவை மைய சேவைகள் விபரம்

ஏ. அக்பர் சுல்தான்

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் “சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இந்த பொது சேவை மையம் செயல்படுத்தப்படுகிறது.

இதர சேவைகள்

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள்பெறவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசுஅலுவலகங்களுக்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறையும்.
பொது மக்களின் மனுக்களை பெறக்கூடிய மையங்கள்.

1. மக்கள் கணினி மையம் (அரசு பொது இ சேவை மையம் )
2.எல்காட்
3. வட்ட அலுவலகங்கள்,
4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்,
5.புது வாழ்வு திட்ட அலுவலகங்கள்

இ-சேவை மைய பயன்பாடுகள்

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

சான்றிதழ்கள்

6-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமானசான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சான்றிதழ்களை பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு பொது இ சேவைமையங்களுக்கு மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழங்கப்படும் சான்றிதழ்கள்

·வருமானச் சான்றிதழ்,
·சாதிச் சான்றிதழ்,
·இருப்பிடச் சான்றிதழ்,
·குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்,
·கணவனால் கைவிடப் பட்டோருக்கான சான்றிதழ்
·சமூக நலத்திட்டங்களில் பெறப்படும் விண்ணப்ப விபரம்.
·முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,
·மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,
·டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்,
·ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,
·டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்,
· அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்

 

அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற விண்ணப்பித்தல், ஸ்மார்ட் ரேசன் கார்டில் தேவையான விவரங்களை முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை சம்மந்தமான மேற்படி சேவைகள் பெற்றிட பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறலாம்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது பல்லாயிரக்கணக்கான அரசு இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.மேலும், இந்த பொது சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்தவேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்தவேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்கள் வாயிலாக மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற முடியும். இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதலான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டி அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டும் வருகின்றது.

தனியார் நிறுவனங்கள் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு சேவைகளையும் இ-பொது சேவை மையம் வழியாகவும் பயனடையலாம். அதில் ஸ்மார்ட் கார்டு சேவை பதிவு செய்தல் திருத்தம் செய்தல், இ-ஆதார் அட்டை விண்ணப்பித்தல் மற்றும் திருத்தங்கள், பான் கார்டு விண்ணப்பித்தல் திருத்தம் செய்தல், பாஸ்போர்ட் புதிதாக விண்ணப்பித்தல், ரினிவல் செய்தல் அதற்கான அப்பாயின்மென்ட் பெறுதல், வருவாய்த்துறை பட்டா/சிட்டா வில்லங்கசான்று, அ-பதிவேடு சேவைகள், திருமண சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவுகள், அரசு பணிகளுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வு.

அனைத்து வங்கிகளுக்கும் உடனடி பணப் பரிமாற்றம் தொடர்பான சேவைகள், எல்.ஐ.சி.புதுப்பித்தல் பணம் செலுத்துதல், மின்சாரவாரிய பணம் செலுத்துதல், இரண்டு/நான்கு சக்கர வாகன காப்பீடு பணம் செலுத்துதல், ஹெல்த் காப்பீடு, விமான டிக்கெட்டுகள், அனைத்து ஆன்லைன் பஸ் டிக்கெட்டுகள், அனைத்து மொபைல் ஆன்லைன் ரீ சார்ஜுகள், வியாபார நிறுவனங்களுக்கும் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சி களுக்கும் அறிவிப்புக்கான மொத்த குறுஞ்செய்தி அனுப்புதல் சேவைகள் அனைத்தும் இங்கு செய்யப்படுகிறது.

தற்போது சிறு தொழில் செய்ய பொது சேவை மையம் தொடங்கப் பட்டுள்ளது. நமது அன்றாட தேவை அனைத்தையும் இந்த சேவை மையத்தில் செய்ய முடியும். உங்கள் பகுதியில் மையம் தொடங்க விருப்பம் இருந்தால் இந்த இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button