அரசு நூலகத்தின் துணையுடன் அரசு பணியாளர் தேர்வில் வெற்றிப் பெற்ற ஷபானா

ஜி. அத்தேஷ்

சென்னையை சேர்ந்த ஷபானா அஞ்சும்(27) என்ற மாணவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை அண்ணா நகரில் இயங்கும் முழு நேர நூலகத்தில் இருக்கும் வசதிகள் தனது வெற்றிக்கு மிகவும் உதவியதாக ஷபானா அஞ்சும் கூறியிருக்கிறார்.தமிழகத்தில் சில மாவட்டங்களில் தான் மத்திய நூலகங்கள் இயங்குகின்றன.

இருப்பினும்,ஒரு மத்திய நூலகத்தின் முழு வசதிகளையும் பயன்படுத்தி அரசுப் பணியாளர் தேர்வில் ஒரு தேர்வராக ஷபானா அஞ்சும் தான் முதன்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.மத்திய நூலகங்கள் ஆய்வு மாணவர்களுக்கு வேண்டி தனி வாசிப்பு அறைகள்,நூல்கள்,இதர வசதிகள் அனைத்தும் உள்ளன.இவை அனைத்தும் இலவசம்.அரசு நூலகம் வழங்கிய இந்த இலவச வசதிகளை மட்டும் முழுமையாக பயன்படுத்தி அரசு பணி தேர்வில் வெற்றி பெற்றேன் என்கிறார் ஷபானா அஞ்சும்.

நூலகர் எஸ்.ரங்க நாதன் எனக்கு தேவைப்பட்ட நூல்கள் அனைத்தையும் தந்து உதவினார் என்று நன்றியுடன் கூறுகிறார்.ஷபானா மதிய உணவை கூட எடுத்து வந்து நாள் முழுவதும் இதர மாணவியருடன் இணைந்து படித்து கொண்டே இருப்பார் என்கிறார் நூலகர் ரங்கநாதன். .நாள் முழுவதும் தினசரி இதழ்களை விடாமல் படிப்பேன், அது எனக்கு உதவியாக இருந்தது என்கிறார் ஷபானா. இந்த நூலகத்தில் தினமும் 50 முதல் 60 மாணவர்கள் இருந்து படித்து கொண்டிருப்பார்கள் என்கிறார் நூலகர் ரங்கநாதன். கடந்த ஏப்ரல் மாதம் தான் அரசு பணி தேர்வு மாணவருக்கு வேண்டி வாசிப்பு அறையை பள்ளி கல்வி செயலாளர் டி.உதய சந்திரன் திறந்து வைத்திருக்கிறார்.அனைத்து மாவட்ட நூலகங்களிலும் போட்டி தேர்வு மையங்களை பள்ளி கல்வி துறை தொடங்கி வைத்தது.

தனியார் பயிற்சி மையங்களில் பணம் கட்டி படிக்க முடியாத 2000 மாணாக்கர்கள் மாவட்ட மைய நூலகங்கள் வழங்கும் இந்த கட்டணமில்லா வசதியை பயன்படுத்துகிறார்கள். அரசு பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளூரில் இருக்கும் திறனாளர்கள் மற்றும் ஆட்சிப் பணியாளர்களை கொண்டு மத்திய நூலகங்கள் பயிற்சி அளிக்கின்றன என்கிறார் பொது நூலகங்கள் இயக்குனர்(பொறுப்பு) எஸ்.கண்ணப்பன்.. தேர்வர்கள் தயாரிப்புக்காக இப்போது ஆங்கில பத்திரிகைகளும் வழங்குகிறோம் என்கிறார். .559 மாவட்ட நூலகங்கள் மற்றும் முழு நேர நூலகங்களுக்கு நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் எண்ணம் 41 வழங்குவதாக கூறுகிறார் கண்ணப்பன்.

Economist.,Competition Refresher, Bussiness Today ,Civil Service Chronicle, Data Quest,,Science Reporter,,Banking and Youஆகிய புத்தகங்கள் பெரும்பாலான ஊர்களில் கிடைக்கும்.தேர்வாளர்கள் தேர்வை எதிர்கொள்ள இவை மிகவும் உதவியாக இருக்கும். ஆட்சிப் பணி தேர்வர்கள் மட்டுமின்றி மாநில அரசு பணிகள், வங்கிகள்,ரயில்வே மற்றும் இதர தேர்வுகளுக்கு செல்வோரும் நூலகங்கள் வருகிறார்கள் என்கிறார் மாநில நூலக இயக்குனர் கண்ணப்பன். ஷபானா அஞ்சும் இப்போது வர்த்தக வரிவருவாய் துறையில்(நீஷீனீனீமீக்ஷீநீவீணீறீ tணீஜ் ஞிமீஜீஷீக்ஷீtனீமீஸீt) உதவி ஆணையராக பணி வழங்கப்பட்டு இருக்கிறார்.

நூலகங்கள் அறிவு சாலைகளாக இருக்கின்றன.நூலகங்களை சரியாக பயன்படுத்தினால் இளைஞர்கள் அறிவு ஜீவிகளாக உயரலாம்.நாட்டின் மிகப்பெரிய அறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் எல்லாம் நூலகங்களில் தான் உருவாகி இருக்கிறார்கள்.சமீப காலமாக நூலகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது.நூலக பயனருக்கு ஏற்ற வசதிகளை அரசு செய்து கொடுத்திருப்பது பாராட்ட தக்கது.நூலகமே ஒரு பாடசாலையாக மாற வேண்டும். .நூலகங்கள் பண்புள்ள மக்களை சமைக்க முடியும்.. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நூலகங்கள் அனுப்பி வழக்கப்படுத்த வேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நூலக தொடர்பை பலப்படுத்த வேண்டும். எதிர்கால நல்ல சமூகத்திற்கு நூலகம் ஒரு பாலமாக அமைய கூடும்.அரசும் நூலக வசதிகளை நன்கு விளம்பரப்படுத்த வேண்டும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button