விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 3

இந்தியர்களின் உரிமைகளுக்காக கால் நூற்றாண்டுக்கு மேல் பாடுபட்டவர் அப்துல் ரஹீம். லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் அவர் பேசியபோது, இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினார்.

“இந்தியாவை சீரழிக்கக்கூடிய அதிகாரம் பிரிட்டிஷாரின் கைகளில் உள்ளது. அந்த அதிகாரத்தை வைத்து நீங்கள் இந்தியாவைச் சீரழித்தால், இது இந்தியாவை மட்டுல்ல; இங்கிலாந்தையும் சேர்த்தே சீரழிக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தவர் அப்துர் ரஹீம்.

மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாபூர் மாவட்டத்தில் கல்வியில் சிறந்த குடும்பத்தில் 1867ஆம் ஆண்டு பிறந்தவர் இவர். இவருடைய தந்தை மவ்லவி அப்துர் ரப், மிட்னாபூர் மாவட்டத்தில் ஜமீன்தார். இவருடைய பாட்டனார் துணைக் கலெக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மிட்னாபூர் அரசினர் பள்ளியில் சேர்ந்து படித்த அப்துல் ரஹீம், உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன்பின் கோல்கட்டா மாநிலக் கல்லூரியில் சேர்ந்து ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று இந்தியாவுக்குத் திரும்பினார். 1890ஆம் ஆண்டு முதல் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

தாகூர் சட்ட விரிவுரையாளர்

1907ஆம் ஆண்டு தாகூர் சட்ட விரிவுரையாளராக அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் ஒப்பீடு செய்து, முஸ்லிம்களல்லாத நாடுகளில் முஸ்லிம்களின் கடமைப் பற்றி விளக்கி ஒரு சிறிய நூல் எழுதி வெளியிட்டார்.

1908ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். அந்த நீதிமன்றத்தின் பாரம்பரியப் புகழை நிலைநாட்டும் வகையில் பணியாற்றி அவர் பாராட்டு பெற்றார். நீதித்துறையில் பணியாற்றிய அவர் கல்வித் துறையிலும் சிறப்பாக சேவை செய்தார்.

சென்னைப் பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராகப் பல ஆண்டுகள் அவர் பதவி வகித்தார்.

1913 -15ஆம் ஆண்டுகளில் ‘ராயல் பப்ளிக் கமிஷன்’ என்னும் அரசுப் பணி தேர்வாணையத்தின் உறுப்பினராக அவர் பொறுப்பு வகித்தார். உயர் பதவிகளில் இந்தியர்களை நியமிக்க வேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன் அதில் அவர் செயல்பட்டார். (அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே உயர் பதவிகளில் பெரும்பாலும் நியமிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). ஐ.சி.எஸ். (இப்போதுள்ள ஐ.ஏ.எஸ். போன்றது) தேர்வை அப்போது இங்கிலாந்தில் மட்டுமே நடத்தி வந்தார்கள். அதை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நடத்த வேண்டும் என்று ஆங்கில அரசை வலியுறுத்தி வந்தார்.

வட்டமேசை மாநாட்டில் விடுதலை முழக்கம்

லண்டனில் 1920ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அப்துர் ரஹீம் கலந்து கொண்டார். பிரிட்டிஷார் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அவர் தனது பேச்சில் வற்புறுத்தினார். பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் உள்ள அந்தஸ்துக்குக் குறையாத ஆட்சியை அமைத்துக்கொள்ள நீங்கள் தடங்கல் செய்கிறீர்கள். இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக் கொள்கையை அப்துல் ரஹீம் எதிர்த்தார். 1932ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி ஓர் அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. அப்போது மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்த அப்துல் ரஹீம் அதனைக் கடுமையாக எதிர்த்தார். “இந்தியா முழுவதையும் சீரழிக்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதை வைத்து இந்தியாவை நீங்கள் சீரழிக்க முயன்றால் யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாகிவிடும். நீங்கள் இந்தியாவைச் சீரழிக்க முனைந்தால், அத்துடன் இங்கிலாந்தும் சீரழிந்து விடும்” என்று அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எச்சரித்தார்.
“இந்தியா வகுப்புவாத நாடல்ல. ஏழ்மையும், வறுமையும், கல்வியறிவின்மையும் உள்ள நாடு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய தேசிய உணர்வுக்கு விரைவில் விடிவு காலம் வரும். அப்போது மதமாச்சர்யங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும்” என்று அவர் முழங்கினார்.

ஆளுநரின் நிர்வாகக்குழு உறுப்பினர்

1920ஆம் ஆண்டில் வங்காளக் கவர்னரின் நிர்வாககவுன்சில் உறுப் பினராக அப்துல் ரஹீம் நியமிக்கப்பட்டார். பாரிசாலில் துப்பாக்கிச் சூடு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதைக் கண்டித்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.

1931ஆம் ஆண்டு மத்திய சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். 1935ஆம் ஆண்டு சட்டசபையின் தலைவராக (இப்போது அந்தப் பதவிக்கு சபாநாயகர் என்று பெயர்) அவர் பதவி உயர்வு பெற்றார். 1945ஆம் ஆண்டு வரை அவர் இப்பதவியை வகித்தார். 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சியை உருவாக்குவதில் அப்துல் ரஹீம் முக்கியப் பங்கு வகித்தார். முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதி ஏற்படுத்த வேண்டும் என்று வைஸ்ராய் மிண்டோவைச் சிம்லாவில் சந்தித்துக் கோரிக்கை வைத்த தூதுக்குழுவில் அவர் ஓர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.
வைஸ்ராயிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டதாகப் பாராட்டப்பட்டது. அதனைத் தயாரித்தவர் அப்துல் ரஹீம். 1925ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். இந்திய தேசிய காங்கிரசை அப்துல் ரஹீம் ஆதரிக்காத போதிலும், பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை எதிர்த்தார். ஆனால் 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு விட்டது. அதன்பின் அவர் பாகிஸ்தானுக்குக் குடியேறி, அங்கேயே காலமானார். சட்ட மேதையும் கல்வி மேதையுமான அப்துல் ரஹீம், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் முன்னேற வேண்டும் என்று உழைத்தவராவார்.

குறிப்புகள்:

Who is Who in India, 1940-41.
India and Pakistan Year Book, 1948.
Ram Gopal, Indian Muslims, Bombay, 1959.
Indian Judges, Madras, 1933.
Eminent Mussalmans, Madras, 1934.
Proceedings of the Indian Legislative Assembly, 1931-1945.
Proceedings of the Bengal Legislative Council 1920-28.
Proceedings, Home and Foreign &Political Deptts, 1908-27.
S.M.Akram, Modern Muslim India and the Birth of Pakistan, Lahore, 1951.
Akhtar Hussain, History of Muslim Leagud, Bombay, 1941.
Indian Review, 1933-35.
Indian Annual Register, 1945-47.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button